அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தேசிய விருது  பெற்ற நிவேதா!

""நிவேதாவுக்கு நன்றாக ஓவியம் வரையத் தெரியும். புகைப்படம் எடுக்கத் தெரியும். கம்ப்யூட்டரில் வேலைபார்க்கத் தெரியும். பல்வேறு கைவேலை செய்ய

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:43 pm

சந்துரு

""நிவேதாவுக்கு நன்றாக ஓவியம் வரையத் தெரியும். புகைப்படம் எடுக்கத் தெரியும். கம்ப்யூட்டரில் வேலைபார்க்கத் தெரியும். பல்வேறு கைவேலை செய்ய தெரியும். குறிப்பாக இவர் செய்த மாலைகள், மற்றவர்களுக்கு பரிசளிக்க விரும்பும் விஷயங்கள் அனைத்தையும் விரைவில் செய்துதர இவர் என்றும் தயாராக இருக்கிறார். பொறுமையை இவரிடம் தான் நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.

ஒரு முறை ஓர் அழகிய மாலையை செய்து முடித்துவிட்டார். என்னிடம் இதை பிடித்து கொள்ளுங்கள் என்று கொடுத்தார். நாள் முழுக்க உழைத்து செய்த மாலை அது. அன்று ஏனோ என்னால் சரியாக பிடித்துக்கொள்ள தெரியவில்லை. கை தவறி மாலை கீழே விழுந்து விட்டது. அதில் உள்ள மணிகள் எல்லாம் தரையில் சிதறிவிட்டன. நானாக இருந்தால் கோபத்துடன் கத்தி இருப்பேன். ஆனால் நிவேதா எந்த கோபமும் கொள்ளாமல் கீழே விழுந்த மணிகளை திரட்டியபடி, நாளை மீண்டும் கோர்க்கலாம் என்று எந்த விதமான கவலையும் இல்லாமல் அடுத்த வேலைக்கு சென்று விட்டாள்'' என்கிறார் நிவேதாவின் தந்தை இளையபாண்டியன்.  இந்த ஆண்டின் சிறந்த தொழிலாளிக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் நிவேதா. 

இந்த தேசிய விருது பெற்ற நாள் மிகவும் மறக்க முடியாதது. ஆம், சென்ற ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பாரத பிரதமர் கையால் பெறவேண்டிய விருது இது. சென்னையில் விடாது மழை பெய்ததால், பிரதமர் இங்கு வர, மத்திய மந்திரி அருண் ஜெட்லி இவருக்கு இந்த விருதை கொடுத்தார். ஒவ்வொருமுறையும் யாராவது இந்த விருதைப் பற்றி பேசினாலே நிவேதாவுக்கு மகிழ்ச்சி ஏற்படும். தானே தான் கையால் இந்த விருதை காண்பிக்க தவறுவதில்லை. இந்த விருதுடன் இவருக்கு சான்றிதழும், ரூ. 50,000 பணமும் அளிக்கப்பட்டன. 

நிவேதா 27 வயது குழந்தை. இவருக்கு ஒன்றரை வயதில் ஜுரம் வந்தது. பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் குழந்தையை காண்பிக்க, அவரும் ஒரு ஊசியை போட்டார். வீட்டிற்கு அழைத்துவரும் வழியிலேயே குழந்தை மயங்கிவிட்டது. பெற்றோர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அன்று ஆரம்பித்த இவர்களின் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது. காலாவதியான மருந்தா, இல்லை தவறான சிகிச்சையா,  ஆண்டவனுக்கே வெளிச்சம். அன்று மூளையை தாக்கியது, இன்றுவரை பிரச்னை அளித்து வருகிறது. இங்ழ்ங்க்ஷழ்ஹப் டஹப்ள்ஹ் என்ற  நோய். பெருமூளை சிறையின் பாதிப்பால் ஏற்படுவது. இதனால் முடக்குவாதம், முழுதும் உதவியற்றநிலை, முழுதும் உதவியற்றதாக்கும் பண்பு , முடக்குவாதப்படுத்து, மரத்துப்போகச்செய், உணர்வுகெடு என்று எதாவது  ஒன்றோ அல்லது அனைத்துமோ தாக்கும். இந்த நிலைதான் நிவேதாவுக்கு.

Story image

இத்துடன் இவருக்கு காதும் கேட்காது, பேசவும் முடியாது. இப்படிப்பட்டவருக்கு சாதாரண பள்ளியிலும் இடம் இல்லை, ள்ல்ங்ஸ்ரீண்ஹப்  ஸ்கூல் என்று சொல்லப்படும் பள்ளியிலும் இடம் இல்லை. காரணம், மற்ற பிள்ளைகளை விட நிவேதா அறிவாளியாம். சொந்தக் காலில் நிற்க விரும்பும் இவருக்கு கிடைத்த இடம்  சஹற்ண்ர்ஹய்ப் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ச்ர்ழ் ங்ம்ல்ர்ஜ்ங்ழ்ம்ங்ய்ற் ர்ச் ல்ங்ழ்ள்ர்ய்ள் ஜ்ண்ற்ட் ம்ன்ப்ற்ண்ல்ப்ங் க்ண்ள்ஹக்ஷப்ண்ப்ண்ற்ண்ங்ள் (சஐஉடஙஈ). இங்கு இவருக்கு ஏற்றாற் போல் பல்வேறு பயிற்சி பெற்றார். படித்து முடித்தவுடன் அங்கேயே மற்றவர்களுக்கும் கற்றுகொடுக்க ஆரம்பித்தார். இன்று அதே பள்ளியில் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, வேலையும் செய்கிறார்.

ஆனால் இது நிரந்தர வேலை இல்லை. நிவேதாவிற்கு ஒரு சகோதரரும் உண்டு. நிவேதாவின் இன்றைய விருப்பம் எல்லாம் ஒன்று தான். தனக்கு ஒரு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும். அதில் வரும் வருமானத்தில் ஏழை குழந்தைகளுக்கு உதவவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.